Theme Check

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!
X

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நேற்றுடன் முடிந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் இன்று முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று முதல் விடுமுறை விடப்படும் நிலையில், மே 20-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it