Theme Check

பள்ளி தேர்வுகள் ரத்தா? மாணவர்கள் மத்தியில் பரபரப்பு!!

பள்ளி தேர்வுகள் ரத்தா? மாணவர்கள் மத்தியில் பரபரப்பு!!

பள்ளி தேர்வுகள் ரத்தா? மாணவர்கள் மத்தியில் பரபரப்பு!!
X

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ பள்ளிகளின் மேலாண் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன. விடையை மட்டும் குறிக்கும் வகையிலான முதல் கட்ட தேர்வு டிசம்பர் மாதத்திலும், விரிவான விடை அளிக்கும் வகையிலான 2 ஆம் கட்ட தேர்வு மார்ச் மாதத்திலும் நடைபெறும்.

அண்மையில் நடைபெற்ற முதல் கட்ட தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், சிபிஎஸ்இ முதல்கட்ட பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ பள்ளிகளின் மேலாண் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CBSE 1

இது மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், முதல் கட்ட பொதுத் தேர்வுக்கான கேள்வித் தாள்களையும், விடைகளையும் தேர்வு நடைபெறுவதற்கு முன்பே மாணவ, மாணவிகளுக்கு சில பள்ளியின் ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விடை தெரியாத கேள்விகளுக்கு 'c ' என குறிப்பிட வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதற்கு பதில் a,b,d என எந்த தெரிவாக இருந்தாலும் அதனை ஆசிரியர்களே மாற்றியமைத்துக் கொள்வதாக குற்றம்சாட்டு எழுந்தது.

CBSE 1

இந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுவதால் மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it