Theme Check

பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆட்டோவில் சென்றதால் வந்த விளைவு..!

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆட்டோவில் சென்றதால் வந்த விளைவு..!
X

பொள்ளாச்சியில் பள்ளிச் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் யாசின். இவர் அதே ஊரைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பயிலும் 16 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைத் தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆட்டோவில் சென்றதால் வந்த விளைவு..!

இது போன்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அம்மாணவி கர்ப்பமாக்கியதாக தெரிகிறது. தான் கர்ப்பமானதை யாசினிடம் கூறிய மாணவி தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆட்டோவில் சென்றதால் வந்த விளைவு..!

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த யாசின், இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மாணவியை மிரட்டியதாக புகார் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாது நின்ற அம்மாணவி, இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் யாசினை கைது செய்தனர்.

பள்ளி மாணவி கர்ப்பம்.. ஆட்டோவில் சென்றதால் வந்த விளைவு..!அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it