இனி பிறந்த நாளிலும் பள்ளி மாணவர்கள் சீருடையில் தான் வர வேண்டும்..!!
இனி பிறந்த நாளிலும் பள்ளி மாணவர்கள் சீருடையில் தான் வர வேண்டும்..!!

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வழக்கமாகி வந்தது.
பள்ளி மாணவர்கள் தங்களது சாதியை அடையாளப்படுத்தும் கயிறுகளை கையில் அணிந்து கொண்டு பல சாதி குழுக்களாக பிரிந்து உணவு இடைவெளியின்போதும், விளையாட்டு நேரங்களிலும் பள்ளி நேரத்தின் போதும் அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் நலனை கருதி, சாதியை வெளிப்படுத்தும் கயிறு அணிவதை தடுக்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாது, கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிய தடை, பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிக்கு இருச்சக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை என்றும் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது மற்றும் டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளி மாணவர்கள் தங்கள் பிறந்த நாள் அன்றும் பள்ளிக்குச் சீருடையில்தான் வரவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

