ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர்!!
ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர்!!

ஆசை வார்த்தை கூறி 8ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில துறை ஆசிரியரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.
தருமபுரி அருகே ஸ்ரீராம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 8ஆம் வகுப்பு மாணவியை சில நாட்களுக்கு முன் அதேபள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் கடத்தி சென்றார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான முபாரக் என்ற ஆங்கில ஆசிரியர் தனது இரு சக்கர வாகனத்தில் மாணவியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் காவல் துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து அரூர், கோம்பூர், சேலம் அயோத்தியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணித்து தேடி வந்தனர். அப்பொழுது அயோத்தியபட்டினம் பகுதியில் மொரப்பூர் காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, இருவரையும் கையும் களவுமாக பிடித்து மொரப்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து ஆங்கில ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
படிக்கும் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினிக்கு பரிந்துரை செய்தார்.

இதனை தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்ற முபாரக் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து முபாரக்கை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in

