Theme Check

மதுரையில் பள்ளி மாணவர்கள் பயணித்த வேன் விபத்து!

மதுரையில் பள்ளி மாணவர்கள் பயணித்த வேன் விபத்து!

மதுரையில் பள்ளி மாணவர்கள் பயணித்த வேன் விபத்து!
X

மதுரை அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று, அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. அந்த வேனில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்து தங்களது பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த வேன் மதுரை, மேலூர் அருகே சென்ற போது சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20 மாணவர்கள் காயமடைந்தனர்.

மதுரையில் பள்ளி மாணவர்கள் பயணித்த வேன் விபத்து!

இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனாடியாக பள்ளத்தில் விழுந்த மாணவர்களை மீட்டு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் மருத்துவர்கள் கூறினர்.

newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it