Theme Check

பள்ளியின் சுவர் இடிந்து விபத்து.. உயிரிழந்த 3 மாணவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி..!

பள்ளியின் சுவர் இடிந்து விபத்து.. உயிரிழந்த 3 மாணவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி..!

பள்ளியின் சுவர் இடிந்து விபத்து.. உயிரிழந்த 3 மாணவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி..!
X

திருநெல்வேலி பொருட்காட்சி திடல் அருகே உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 17ம் தேதி காலை, கழிவறை சுவர் இடிந்து விழுந்தது. இதில், அன்பழகன் (9ம் வகுப்பு), விஸ்வ ரஞ்சன் (8ம் வகுப்பு), சுதீஸ் (6ம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுவர் விழுந்ததில் படுகாயம் அடைந்த சஞ்சய், இசக்கி பிரகாஷ், ஷேக் அபுபக்கர், அப்துல்லா ஆகியோர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளி மாணவர்களை சுற்றி வரும் மரண ஓலம் : சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள்  பலி.. தமிழகத்தில் தொடரும் சோகம்!! – Update News 360 | Tamil News Online |  Live News ...
இந்நிலையில், உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெறும் மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த மாணவர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று நெல்லை திருச்சபை அறிவித்துள்ளது. மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் நெல்லை திருச்சபை அறிவித்துள்ளது.

Next Story
Share it