பள்ளி மாணவி கர்ப்பம்.. ஒருவன் கைது.. காதலன் தலைமறைவு
பள்ளி மாணவி கர்ப்பம்.. ஒருவன் கைது.. காதலன் தலைமறைவு

பள்ளி சிறுமியை சினிமா பாணியில் ஒருவர் மிரட்டி வன்கொடுமை செய்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திதல் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசு பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதிகளவு செல்போன் பயன்படுத்தும் பழக்கம்கொண்ட சிறுமி சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார். தற்போது பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சிறுமிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தனியாக சேட் செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சமூக வலைதள நட்பு சில நாட்களில் நேரில் பார்க்காமலே காதலாக மலர்ந்துள்ளது.

இதனால் இருவரும் காதல், காமம் என பேசத்தொடங்கியுள்ளனர். இளைஞர் குமாரின் பேச்சில் சிறுமியும் மயங்கியதால் நேரில் சந்தித்து இருவரும் காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் இளைஞர் குமார் பலமுறை உறவு வைத்துள்ளார். இந்த உறவு விவகாரம் அதே பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து(35) என்பவருக்கு தெரியவந்துள்ளது.
பின்னர், இருவரையும் மிரட்டியதோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன் கூறியுள்ளார் மாரிமுத்து. சிறுமியை மிரட்டி மாரிமுத்து பலமுறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் தற்போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து பெற்றோர் பெரும் அதிர்ச்சிஅடைந்தனர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி கரூர் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் ரூபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த மாரிமுத்துவை போக்சோ தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், சம்பவத்திற்கு முக்கிய காரணமான திருப்பூரை சேர்ந்த குமார் தலைமறைவாகிவிட்டதால் அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால், பள்ளி சிறுமியை சினிமா பாணியில் ஒருவர் மிரட்டி வன்கொடுமை செய்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

