Theme Check

இரு குழுக்களாக பிரிந்து ஆக்ரோஷமாக தாக்கி கொள்ளும் பள்ளி மாணவிகள்..!

இரு குழுக்களாக பிரிந்து ஆக்ரோஷமாக தாக்கி கொள்ளும் பள்ளி மாணவிகள்..!

இரு குழுக்களாக பிரிந்து ஆக்ரோஷமாக தாக்கி கொள்ளும் பள்ளி மாணவிகள்..!
X

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டு வருவதை காண முடிகிறது. சமீபத்தில் ஆபத்தை உணராமல் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஏறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது போன்ற சம்பவங்களுக்கு காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தது.

இந்நிலையில் ஆவடி பேருந்து நிலைய பணிமனையில் காத்திருந்த மாணவிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சண்டையிட்டுக் கொள்ளும் மாணவிகள் பொதுமக்கள் சமாதானம் செய்தாலும் நிறுத்தவில்லை. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது பள்ளியில் எந்த மாதிரியான கல்வி கற்றுக்கொடுக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Next Story
Share it