பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு! மாணவர்கள் ஆர்வம்!!
பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு! மாணவர்கள் ஆர்வம்!!

புதுச்சேரியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
குறிப்பாக ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதியிலிருந்து, 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் , கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்த சூழலில் தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் பள்ளி ,கல்லூரிகள் திறக்க அம்மாநில அரசு முடிவெடுத்தது.இந்நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறவேண்டும் என்றும் புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது.
வாரம் 6 நாட்கள் முழுமையாக நடக்கும் அனைத்து வகுப்புகளிலும் வருகை பதிவோடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
newstm.in

