Theme Check

பள்ளிகள் திறப்பு.. திருப்புதல் தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

பள்ளிகள் திறப்பு.. திருப்புதல் தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

பள்ளிகள் திறப்பு.. திருப்புதல் தேர்வு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!
X

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

“10, 11, 12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளோம். பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் ஒரு திருப்புதல் தேர்வு நடக்கும். பொது தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது” எனத் தெரிவித்தார்.

7.5 சதவீதம் வந்த பின்னர்தான் அரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என ஆளுநர் கூறியுள்ளாரே..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “ஆரம்பத்தில் இருந்தே அதனை நியாயப்படுத்தும் விதத்தில்தான் கூறுகிறார்கள். அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முதல்வர் எவ்வளவு முயற்சி செய்கிறார் என்று அனைவருக்கும் தெரியும்.

அரசு பள்ளிகளை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். இருமொழி கொள்கைதான் நமது கொள்கை; அதிலிருந்து பின்வாங்க மாட்டோம்” என்றார்.

Next Story
Share it