தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!

திருச்சி நவல்பட்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று (5-ம் தேதி) திறந்து வைத்து பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி ஜூன் 13-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு நலனுக்கு எந்த விதத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதனடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்திற்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்யும் கூட்டத்திற்கு தான் முக்கியத்துவம் தருவோம். அதுதான் நம் மாநிலத்திற்கும் நல்லது.
நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என நம்மிடம் கூறுகிறார்” என்றார்.

