Theme Check

நாளை முதல் பள்ளிகள் மூடல்.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

நாளை முதல் பள்ளிகள் மூடல்.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

நாளை முதல் பள்ளிகள் மூடல்.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!
X

நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதுச்சேரியில் எந்தவித தடைகளும் விதிக்கப்படவில்லை.

இதனால், புத்தாண்டு தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் புதுச்சேரி கடற்கரையில் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதுவே, புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிக்க காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதோடு கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், தமிழகத்தில் கடந்த 5-ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியிலும் நாளை (10ம் தேதி) முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story
Share it