வரும் திங்கள் முதல் பள்ளிகள் திறப்பு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!
வரும் திங்கள் முதல் பள்ளிகள் திறப்பு.. கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அனைத்து மாவட்டங்களிலும் பிப்ரவரி 15-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அங்கு, தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியுள்ளது.
இருந்தபோதும், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது. இந்த சூழலில் நேற்று, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43,697 ஆக பதிவாகி இருந்தது.

மேலும், மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க ஜனவரி 24ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், கொரோனா பாதிப்புகள் சற்று குறையத் தொடங்கி இருக்கும் நிலையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்து உள்ளோம் என்றும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமாக இல்லாத காரணத்தால் இதே அறிவிப்பை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Next Story

