Theme Check

தகிக்கும் வெப்பம்.. தமிழகத்தில் இன்று 5 இடங்களில் சதமடித்த வெயில் !!

தகிக்கும் வெப்பம்.. தமிழகத்தில் இன்று 5 இடங்களில் சதமடித்த வெயில் !!

தகிக்கும் வெப்பம்.. தமிழகத்தில் இன்று 5 இடங்களில் சதமடித்த வெயில் !!
X

தமிழகத்தில் இன்று 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதனைத்தொடர்ந்து மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது.

இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்தது. இப்படி வெயில் கடந்த சிலநாட்களாகவே மக்கள் வாட்டிவதக்கி வருகிறது.

heat

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 5 பகுதிகளில் வெயில் அளவு 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், சேலம் ஆகிய 5 பகுதிகளில் வெயில் 100 ஃபாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது.

அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 செல்சியஸ் (103.1 ஃபாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவானது. அடுத்ததாக மதுரை விமான நிலையத்தில் 38.7 செல்சியஸ் (101.66 ஃபாரன்ஹீட் டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. மதுரை நகரில் 38.6 செல்சியஸ் (101.48 ஃபாரன்ஹீட் டிகிரி) ஈரோடு, சேலத்தில் 38 ( 100.4 ஃபாரன்ஹீட் டிகிரி) பதிவாகியிருந்தது.

newstm.in

Next Story
Share it