ஊருக்குள் படையெடுத்த தேள்கள் கொட்டியதில் 3 பேர் பலி- 500 பேருக்கு தீவிர சிகிச்சை !!
ஊருக்குள் படையெடுத்த தேள்கள் கொட்டியதில் 3 பேர் பலி- 500 பேருக்கு தீவிர சிகிச்சை !!

நச்சுக்கொடுக்கினைக் கொண்டிருக்கும் தேள்கள் காடுகள், புதர்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளில் படையெடுத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எகிப்து நாட்டின் தெற்கு அஸ்வான் நகரத்தில் கடந்த வாரம் இடைவிடாமல் கனமழை பெய்துள்ளது. இதனால் அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். மேலும் பல வீடுகள் சேதடைந்துள்ளன. இதனிடையே, இந்த மழை காரணமாக தங்களது இருப்பிடத்திலிருந்து தேள்கள் வெளியேறி வீதி வீதியாக உலா வரத்தொடங்கின. இதனால் தேள்கள் விரட்டி விரட்டி கடித்ததில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அசவர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வீட்டிலிருந்து யாரும் வெளியேவர வேண்டாம் என்றும், மரங்கள் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உள்ளூர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையில் இருக்கும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நச்சுக்கொடுக்கினைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலானவற்றின் நஞ்சு மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை. ஆனால், உலகிலேயே எகிப்து நாட்டில் இருக்கும் தேள்களுக்குத்தான் கொடிய விஷம் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிலும் கறுப்பு தேள்கள் கொட்டினால் ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் உயிரிழக்க நேரிடும் என்ற வகை தேளும் அங்குதான் உள்ளது.
இதனால் எகிப்து நாட்டில் தேள் கொட்டியதில் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

