Theme Check

கதறியழுத பெண் மருத்துவர்! இதுக்கப்புறமாவும் திருந்தலைன்னா.. இந்த என்ன ஜென்மமோ? வைரல் வீடியோ!

கதறியழுத பெண் மருத்துவர்! இதுக்கப்புறமாவும் திருந்தலைன்னா.. இந்த என்ன ஜென்மமோ? வைரல் வீடியோ!

கதறியழுத பெண் மருத்துவர்! இதுக்கப்புறமாவும் திருந்தலைன்னா.. இந்த என்ன ஜென்மமோ? வைரல் வீடியோ!
X

மும்பையில் நிலவும் மோசமான கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவை கொரோனா 2ஆவது அலை ஆட்டிப்படைத்து வருகிறது. அதிலும் மகாராஷ்டிராவில் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. நாள் ஒன்றுக்கு 50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் நிலையில், மொத்த பாதிப்பு 40 லட்சத்தை நெருங்கியுள்ளது.

அதனால் அங்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பெருந்தோற்றுக் காலத்தில் நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையை, இதற்கு முன்பு நாங்கள் யாரும் கண்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.


இங்கு படுக்கை இல்லாததால் மிகவும் மோசமான நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.

உங்களுக்கு கொரோனா வரவில்லை என்றாலோ, கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தாலோ உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என நினைக்க வேண்டாம்.

உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக நினைக்காதீர்கள். அவ்வாறு நினைத்திருந்தால் அது தவறு என இந்த நிமிடமே தெரிந்துகொள்ளுங்கள்.

கொரோனா எல்லா இடங்களிலும் உள்ளது. அதனால் மாஸ்க் அணியாமல் வெளியே செல்லாதீர்கள். தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். தடுப்பூசி கடுமையான பாதிப்பை தடுக்க உதவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it