சீமான் அதிரடி! ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்! சரி பாதி பெண்களுக்கு ஒதுக்கீடு!

சீமான் அதிரடி! ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்! சரி பாதி பெண்களுக்கு ஒதுக்கீடு!

சீமான் அதிரடி! ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்! சரி பாதி பெண்களுக்கு ஒதுக்கீடு!
X

எல்லோரும் ஒரு திசையில் பயணித்தால், மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுப்பேன் என்று கட்சி துவங்கிய போது அறிவித்திருந்த சீமான், அந்த திசையில் தொடர்ந்து பயணித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது, தனது கட்சி சார்பாக களமிறங்கும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்துவது, தேர்வு செய்யும் வேட்பாளர்களில் 50 சதவிகிதம் பெண் வேட்பாளர்களை களமிறக்குவது, தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில், ஜாதி வாக்குகளைக் கருத்தில் கொள்ளாமல் வேட்பாளரைத் தேர்வு செய்வது என்று தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார்.

இப்படியெல்லாம் அரசியல் செய்தால்... நீங்கள் முதல்வராவதற்கு வாய்ப்பே இல்லையே? என்று நிரூபர்கள் யாராவது கேட்டால் சிரிக்கிறார் சீமான்.

நான் எப்போதுமே முதல்வராக முடியாதுன்னு எனக்கு தெரியும். ஆனால், எனக்கு பின்னால் ஒரு 50 வருஷம் கழித்தாவது தமிழகத்திற்கு விடிவு காலம் வருமில்லையா? தமிழன் தான் தமிழகத்தை ஆழ்வான். இந்த ஜாதி அரசியல் அப்போ காணாமல் போயிடும் என்று சிரிக்கிறார்.



இம்முறை, ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்கள் தேர்வில் பிற அரசியல் கட்சிகள் மும்முரமாக வேலைப் பார்த்து வருகையில், முதல் கட்சியாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார் சீமான்.

தனித்தொகுதிகளில் ஆதித்தொல் குடிகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாது, இதுவரை தேர்தல் அரசியலில் ஒதுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்களைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கும் பிரதிநிதித்துவம் தந்தது நாம் தமிழர் கட்சி. பாலியல் சிறுபான்மையினரான திருநங்கையைத் தேர்தல் களத்தில் நிறுத்தியது.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தேர்தலிலும் 20 தொகுதிகளில் ஆண்களையும், 20 தொகுதிகளில் பெண்களையும் வேட்பாளர்களாக களமிறக்கியது நாம் தமிழர் கட்சி. இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், வருகிற மார்ச் 7 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 3 மணியளவில் சென்னை, இராயப்பேட்டை ஒ.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது.

Tags:
Next Story
Share it