Theme Check

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வு தேதி அறிவிப்பு..!

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வு தேதி அறிவிப்பு..!

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வு தேதி அறிவிப்பு..!
X

கொரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

இதன்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்குப் பதில், இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான முதல் பருவ தேர்வுகள், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்தன.

இதற்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வுகள் ஏப்ரல் மாதம் துவங்குகின்றன.

இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியதாவது: ‘10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ தேர்வுகள் வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதல் நடத்தப்படும். கொரோனா நிலையை ஆய்வு செய்தோம்.

இதன் அடிப்படையில் இரண்டாம் பருவ தேர்வுகளை, மாணவ - மாணவியர் தேர்வு மையங்களுக்கு வந்து எழுத வேண்டும் என முடிவு செய்யப்பட்டது’ என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
Share it