கழிவறையில் ரகசிய கேமரா... ஊழியர் செல்போன் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்..!!
கழிவறையில் ரகசிய கேமரா... ஊழியர் செல்போன் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி சம்பவம்..!!

மத்துார் பி.டி.ஓ. அலுவலக சத்துணவு பிரிவில், சாமல்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதாகர் (32), என்பவர் தற்காலிக பணியாளராக 4 ஆண்டுகளுக்கு மேலாக, கம்ப்யூட்டர் பிரிவில் பணியில் இருந்து வந்தார்.
பி.டி.ஓ., அலுவலக கழிப்பறையில் மின் விளக்கு பொருத்தும் ஹோல்டரில், ரகசிய கேமராவை அவர் பொருத்தியுள்ளார். கேமரா இருப்பதை அறியாத ஊழியர்கள், கழிப்பறையை பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன், அவரது மொபைல் போன் தவறி விழுந்துள்ளது. அதை உறவினர் ஒருவர், 'ஆன்' செய்தபோது, ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்கள் இருந்து உள்ளன.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த உறவினர், சுதாகரிடம் மொபைல்போனை கொடுக்காமல், 20 நாட்களுக்கு முன், மத்துார் பெண் பி.டி.ஓ. அருள்மொழியிடம் ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து, கழிவறை மின் விளக்கில் பொருத்தப்பட்டிருந்த அந்த ரகசிய கேமரா மற்றும் சுதாகர் பயன்படுத்திய கணிணியின் ஹார்ட் டிஸ்க் அகற்றப்பட்டது. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து மத்துார் பி.டி.ஓ. அருள்மொழியிடம் கூறும்போது, “கழிப்பறையில் ரகசிய கேமரா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அலுவலக கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து பார்த்துள்ளார். இதனால், சுதாகரை பணிநீக்கம் செய்தேன்” என்றார்.

இதுகுறித்து சுதாகர் கூறுகையில், வருத்தம் தெரிவித்த அவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், ஆன்லைனில் அந்த கேமராவை வாங்கினேன். மின் விளக்கில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த கேமரா, விளக்கு எரியும்போது தானாக, 'ஆன்' ஆகி விடும். அதை கழிப்பறையில் வைத்தது உண்மை தான். ஆனால், அதை எடுக்க தவறி மன்னிக்க முடியாத தவறு செய்து விட்டேன். அதனால் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளேன் என்றார்.
இந்த சம்பவம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

