Theme Check

பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமராக்கள்.. பக்தர்கள் பெரும் அதிர்ச்சி !!

பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமராக்கள்.. பக்தர்கள் பெரும் அதிர்ச்சி !!

பெண்கள் குளியல் அறையில் 3 ரகசிய கேமராக்கள்.. பக்தர்கள் பெரும் அதிர்ச்சி !!
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த சித்தவநாயக்கன்பட்டி கிராமத்தில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. சுமார் 35 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி சிறப்பு பூஜைகளும், ஆண்டுக்கொருமுறை மாசிக்கொடை திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த சிறப்பு பூஜைகளில் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் இக்கோவிலில் தங்குவதற்கும், குளிப்பதற்கும் கோவில் நிர்வாகம் சார்பில் தனி அறைகள் ஏற்படுத்தப்பட்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

temple camera

இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி பௌர்ணமி தினத்தன்று கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து தரிசனம் செய்து கொள்வதற்காக ஏராளமானோர் இக்கோவிலுக்கு வந்திருந்தனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் குளிப்பதற்காக இக்கோவில் வளாகத்தில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார்.

temple camera

அங்கு சுவருக்கு மேல் ஒரு கருப்புநிற ஓயர் செல்வதை கண்ட அவர் சந்தேகமடைந்து அதனை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அதில் ரகசிய கேமிரா பொறுத்தப்பட்டிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோவில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து முறையிட்டபோது, விஷயம் தெரிந்தால் கோவிலின் பெயர் கெட்டுவிடும் எனக் கூறியதாக தகவல் கூறப்படுகிறது.

எனினும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் விளாத்திக்குளம் போலீசார் கோவிலுக்கு சென்று குளியலறையில் சோதனையிட்டனர். அதில் மேலும் 2 ரகசிய கேமராக்களை கண்டுபிடித்துள்ளனர். சார்ஜருடன் இருக்கும் கேமராவை பறிமுதல் செய்தது போலீசாரையும் பக்தர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு தள்ளியது.

temple camera

பல மாதங்களாக ரகசிய கேமராக்கள் மூலம் பெண்கள் குளிப்பது படம்பிடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள கோவில் நிர்வாகத்தினர், தங்களுக்கு பிடிக்காதவர்கள் யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என கூறியுள்ளனர். எனினும் ரகசிய கேமிராவை வைத்தது யார் என கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Next Story
Share it