பிரபல உணவக பாத்ரூமில் ரகசிய வீடியோ பதிவு.. திமுக பெண் பிரமுகர் போலீசில் புகார்..!
பிரபல உணவக பாத்ரூமில் ரகசிய வீடியோ பதிவு.. திமுக பெண் பிரமுகர் போலீசில் புகார்..!

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவர், மதுரவாயல் தொகுதி திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலாளரை சந்திப்பதற்காக கிண்டி வந்துள்ளார்.
தேர்தல் தொடர்பான நேர்காணலில் கலந்துகொண்ட பின்னர், கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் இன்று மதியம் சாப்பிடச் சென்றுள்ளார்.
அங்குள்ள பாத்ரூம் சென்றபோது, அங்கு அட்டைப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனின் கேமரா ஆன் செய்யப்பட்டிருந்தது.
செல்போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர், செல்போனை பறிமுதல் செய்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

