குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!
குடியரசு தினத்தை முன்னிட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

வருகிற 26-ந்தேதி கொண்டாடப்பட இருக்கும் குடியரசு தினத்தையொட்டி டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. தீவிரவாதிகள் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையங்களிலும், முக்கிய இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் போலீசார் உஷார் நிலையில் இருந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து விமான நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, பயணிகளையும், அவர்களது உடமைகளையும் கடுமையாக சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். நாடு முழுவதும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
newstm.in
Tags:
Next Story

