“என்னையா ஏமாத்துற” காதலனை பழிவாங்க என்ன செய்தார் பாருங்க..!!
“என்னையா ஏமாத்துற” காதலனை பழிவாங்க என்ன செய்தார் பாருங்க..!!

அமெரிக்காவின் இண்டியான மாகாணம் இண்டியானாபோலிஸ் பகுதியைச் சேர்ந்த 26 வயதான கெய்லின் மோரிஸ் என்ற பெண் ஆண்ட்ரே ஸ்மித் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கெய்லினுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து காதலன் செல்லும் இடங்களை அறிய ஏர்டேக் கருவியை அவர் பயன்படுத்தி வந்த நிலையில், மதுபானக் விடுதி ஒன்றில் காதலன் இருப்பதை அறிந்த அப்பெண் அங்கு சென்றுள்ளார்.
அப்போது தன் காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டு கெய்லின் அதிர்ச்சியடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த காதலி, காதலனுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். அதன்பின் காதலன் பாரை விட்டு வெளியே வந்தபோது காரை வேகமாக இயக்கி அவரை கொலை செய்துள்ளார்.

இதில் அவரது காதலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

