திருமணம் செய்ய என்னமா யோசிச்சிருக்காங்க பாருங்க ..!!
திருமணம் செய்ய என்னமா யோசிச்சிருக்காங்க பாருங்க ..!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதுமணத் தம்பதி உணவு சமைக்கும் ராட்சத அலுமினிய பாத்திரத்தில் அமர்ந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
குதிரை வண்டி, கார் போன்றவற்றில் புதுமனத் தம்பதி அழைப்பு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கேரளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக உணவு சமைக்கும் பாத்திரத்தில் அமர வைத்து தம்பதியை திருமண வீட்டார் அழைத்துச் சென்றனர்.
பின்னர் மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் தம்பதிகளில் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.
Tags:
Next Story

