Theme Check

நிர்வாகிகளால் தர்மசங்கடத்தில் சீமான்.. காரணம் இதுதான் ?

நிர்வாகிகளால் தர்மசங்கடத்தில் சீமான்.. காரணம் இதுதான் ?

நிர்வாகிகளால் தர்மசங்கடத்தில் சீமான்.. காரணம் இதுதான் ?
X

ஈரோடு மாவட்டத்தில் கீழ் பவானி வாய்க்காலில் அரசு கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.

அந்த வகையில் கீழ் பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுக்கு ஆதரவாக கடந்த மாதம் 29ஆம் தேதி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.

ஆனால், அந்த போராட்டத்தை கட்சியின் தலைமை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் ஈரோடு நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருந்தனர்.

seeman

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ததால் அதிருப்தி அடைந்த ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்த், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் லோகுபிரகாசு, மேற்கு மாவட்ட செயலாளர் தாமோதரன், வடக்கு மாவட்ட செயலாளர் அப்புசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரகுமார், வடக்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் போன்ற முக்கிய நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அதாவது தாங்கள் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், உறுப்பினர்கள் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை அதிருப்தி அடைந்துள்ளனர். இவ்வாறு கட்சியில் இருந்து விலகியவர்கள் விரைவில் வேறு கட்சியில் இணைவார்கள் என கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it