பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 9-ல் ஏலம் !
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 9-ல் ஏலம் !

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பொது ஏலம் வேலூரில் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழகத்தில் வாகன தணிக்கை மற்றும் பல்வேறு பணிகளின்போது, திருட்டு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் விபத்தது தொடர்பான வாகனங்கள், மது போன்ற போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர்.
நீண்டகாலமாக அவை காவல்நிலையத்திலேயே இருப்பதால் ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில், வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வேலூா் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் தமிழக அரசாணைப்படி பொது ஏலத்தில் விற்பனை செய்து அரசுக்கு ஆதாயம் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான பொது ஏலம் வேலூா் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் வருகிற 9ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும். வாகனத்தை ஏலம் எடுக்கப் பாா்வையிடுவோா் ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். ஏலம் கோரப்படும் வாகனங்களின் ஏலத் தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமும் விற்பனை வரியைச் சோ்த்து செலுத்த வேண்டும்.
ஏலம் எடுத்த வாகனங்களுக்கு ரசீது வழங்கப்படும். அந்த ரசீதே ஏலம் எடுத்த வாகனத்துக்குண்டான உரிமை ஆவணமாகக் கருத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
newstm.in

