Theme Check

பிளஸ் 2 பொதுத்தேர்வில் காப்பி அடிக்க வைத்திருந்த ஒருகிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல்.. பறக்கும் படை அதிரடி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் காப்பி அடிக்க வைத்திருந்த ஒருகிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல்.. பறக்கும் படை அதிரடி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் காப்பி அடிக்க வைத்திருந்த ஒருகிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல்.. பறக்கும் படை அதிரடி
X

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 மாணவர்களிடம் இருந்து ஒரு கிலோ அளவுக்கு மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்து கல்வி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மாணவர்கள் உற்சாகமாக தேர்வு எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மையங்களில் பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு உயிரியியல், வரலாறு தேர்வுகள் நடைபெற்று முடிந்தது. நாமக்கலில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு மையங்களுக்கு வாகனங்களில் சென்றுக்கொண்டிருந்தனர்.

cbse exam

செல்லும் வழியில் நாமக்கல் செம்மேட் என்ற இடத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில், மாணவர்கள் கூட்டமாக நிற்பதை பறக்கும் படை அதிகாரிகள் பார்த்தனர். பின்னர் அந்த கடைக்கு சென்று பார்த்தபோது, மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்க புத்தகம், நோட்ஸில் உள்ள முக்கியமான கேள்விகளின் விடைகளை மைக்ரோ ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது.

இதனை பார்த்த அதிகாரிகள் பிட் பேப்பர்களை பறிமுதல் செய்துவிட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறினர். ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடம், மாணவர்களின் தவறுக்கு துணை போகாதீர்கள் என எச்சரித்தனர்.
cbse exam
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு கணிதத்தேர்வு நடைபெற்றது. தேர்வு துவங்க அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே, பறக்கும் படையினர் நேற்று பல்வேறு மையங்களுக்குச் சென்று, மாணவர்களிடம், பிட் பேப்பர் இருந்தால் முன்கூட்டியே கொடுத்துவிடும்படி எச்சரித்தனர். இதையடுத்து பல்வேறு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிக்க கொண்டு வந்திருந்த மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்களை கொடுத்து விட்டனர்.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மைக்ரோ ஜெராக்ஸ் என்ற அளவில், சுமார் ஒரு கிலோ எடையில் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstm.in

Next Story
Share it