செல்ஃபி மோகம்.. 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம் !
செல்ஃபி மோகம்.. 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம் !

செல்ஃபி மோகத்தால் 140 அடி பள்ளத்தில் விழுந்து உயிரோடு மீட்கப்பட்டவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கலாபுர்கி மாவட்டம் ஜேவர்கியைச் சேர்ந்த பிரதீப் சாகர் (30) என்பவர், தனது நண்பர்களுடன் கோகாக் நீர்வீழ்ச்சி குகைப் பகுதிக்கு சுற்றுலாச் சென்றுள்ளார். இயற்கையின் அழகை ரசித்த அவர் அதனை தனது செல்போனில் படம்பிடித்தார். மேலும், செல்ஃபியும் எடுத்து மகிழ்ந்தார். அங்கு பார்வையாளர் மாடத்தின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற போது, கால் தவறி 140 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார்.

காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு தீவிரமாக தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்ல. அதே வேளையில், அவரது செல்போன் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில், மறுநாள் அதாவது திங்கள்கிழைமை அதிகாலை 4 மணிக்கு, சாகர் தனது செல்லிடப்பேசியிலிருந்து நண்பரை அழைத்தள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்று காவல்துறைக்கு தகவல் அளித்ததன் மூலம், அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, அவர் விழுந்த இடத்திலேயே செல்லிடப்பேசியும் விழுந்ததால், அவர் உடனடியாக மீட்கப்பட்டுள்ளார். செல்ஃபி மோகத்தால், கால் தவறி 140 அடி பள்ளத்தில் விழுந்த போதும், அதிர்ஷ்டவசமாக, சிறிய காயங்களுடன் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் கீழே விழுந்ததில் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in

