Theme Check

செல்ஃபி மோகம்... ரயில் பெட்டி மீது ஏறிய மாணவன் பலி!!

செல்ஃபி மோகம்... ரயில் பெட்டி மீது ஏறிய மாணவன் பலி!!

செல்ஃபி மோகம்... ரயில் பெட்டி மீது ஏறிய மாணவன் பலி!!
X

மதுரையில் ரயில் மீது ஏறி விளையாடியபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் விக்னேஷ்வர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து கூடல் நகரில் உள்ள ரயில்கள் நிறுத்தும் பகுதிக்குச் சென்றார்.

அங்கு வந்த நண்பர்கள் நான்கு பேரும் ரயில் பெட்டிகளில் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். மேலும் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். அப்போது விக்னேஷ்வர் ரயில் பெட்டியின் மீது ஏறி தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றார்.

train selfie 1

அப்போது மேல சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் இருந்து விக்னேஷ்வர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் ரயில் பெட்டியின் மேலே இருந்து கீழே விழுந்தர். அதைப்பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் விக்னேஷ்வரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் பெட்டி மீது ஏறி செல்ஃபி எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it