Theme Check

இளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி.. போலீசார் விசாரணையில் பகீர் பின்னணி !

இளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி.. போலீசார் விசாரணையில் பகீர் பின்னணி !

இளைஞரின் உயிரை பறித்த செல்ஃபி.. போலீசார் விசாரணையில் பகீர் பின்னணி !
X

ஓடும் ரயிலில் படிக்கட்டில் நின்றபடி செல்ஃபி எடுக்கையில் தடுமாறி கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் அபிஷேக் (19) என்ற இளைஞர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், கடந்த 7 ஆம் தேதி தனது 4 நண்பர்களுடன் சொந்த ஊருக்கு ரயில் மூலம் சென்றுள்ளார். ஊரில் திருவிழா நடக்க இருந்ததால் தனது நண்பர்களுடன் அவர் குஷியாக சென்றுகொண்டிருந்தார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை.

இது குறித்து பெற்றோர், அபிஷேக்கின் நண்பர்களிடம் கேட்டப்போது பயணம் செய்த அவர், தங்களுடன் தான் பயணித்துள்ளார், சீட்டில் இருந்து சென்றவர் அதன்பின் அவரை காணவில்லை என்றும் அந்த 4 நண்பர்களும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்.

train

இதைத்தொடர்ந்து அபிஷேக்கின் பெற்றோர் தங்களின் மகனை காணவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் ரயிலிருந்து தங்களின் தேடுதல் பணியை தொடங்கியுள்ளனர். அதன் பின்னர் தான் தெரியவந்தது அபிஷேக் உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி. அபிஷேக் படியில் நின்றபடி பயணம் செய்ததும், அப்போது அவர் செல்ஃபி எடுக்க முயன்று, தடுமாறி கீழே கால்வாய் ஒன்றில் விழுந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து அவரின் உடலை எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it