பிரதமர் மோடியுடன் செல்ஃபி.. நடிகை அமைச்சர் உற்சாகம்
பிரதமர் மோடியுடன் செல்ஃபி.. நடிகை அமைச்சர் உற்சாகம்

பிரதமர் மோடியுடன் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
பிரதமர் மோடி தெலங்கானா, ஆந்திராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் இன்று, ஆந்திரப்பிரதேசத்தின் பீமாவரத்தில் விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125ஆவது பிறந்தநாளின் ஓராண்டு கால விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது, அல்லூரி சீதாராம ராஜூவின் 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து டிஜிட்டல் இந்தியா பாஷினி, டிஜிட்டல் இந்தியா ஜெனசிஸ் உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மை ஸ்கீம், மேரி பெஹச்சான் ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அம்மாநில அமைச்சசரும் நடிகையுமான ரோஜா கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்தபிறகு பிரதமர் மோடியுடன் ஆந்திர அமைச்சர் ரோஜா செல்ஃபி எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முதலில் செல்ஃபி எடுத்தப்போது தள்ளிநின்ற பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டார். ஆனால், அடுத்து ரோஜா கேட்டுக்கொண்டதால் மீண்டும் செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர்.
Minister roja selfie with p m modi #roja @PMOIndia pic.twitter.com/7w6gcm224M
— meenakshisundaram (@meenakshinews) July 4, 2022
newstm.in

