Theme Check

தன்னைத்தானே திருமணம் செய்த பெண் விவாகரத்துக்கு மறுப்பு: மாப்பிள்ளையின் ரூ.3 கோடியை ஏற்க மறுப்பு !!

தன்னைத்தானே திருமணம் செய்த பெண் விவாகரத்துக்கு மறுப்பு: மாப்பிள்ளையின் ரூ.3 கோடியை ஏற்க மறுப்பு !!

தன்னைத்தானே திருமணம் செய்த பெண் விவாகரத்துக்கு மறுப்பு: மாப்பிள்ளையின் ரூ.3 கோடியை ஏற்க மறுப்பு !!
X

இன்றைய நவீன காலத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் பலவேறு வகையான அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் பெரும்பாலும் தனிமையை விரும்புகின்றனர். அந்த வகையில், தனிமையை விரும்பிய பிரேசில் நாட்டு இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துக்கொண்டார்.

அதாவது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலிங் நடிகை கிரிஸ் கிளாரியா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார். ஆண்கள் பலருடன் டேட்டிங் செய்த இவர் ஆண்களே தனக்கு செட்டாக மாட்டார்கள் என வெறுத்து தனியாக இருந்தார்.

Cris Galera

அப்பொழுது இவருக்கு ஆண்களே தேவையில்லை என்ற எண்ணம் தோன்றியது. உடனடியாக அவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால், தன்னைத்தானே அவர் திருமணம் செய்துக்கொண்ட பின்னர், அவருக்கு பல ஆண்களிடமிருந்து திருமணத்திற்கு அழைப்பு வந்து குவிந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், அரபு நாட்டிலிருந்து ஷேக் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோரியதாகவும், அதற்காக அவர் ரூ.3 கோடி வரதட்சனையாக தர தயாராக இருப்பதாகவும் கூறினார். அவர் தற்போது நான் என்னையே திருமணம் செய்ததை விவாகரத்து செய்துவிட்டு அவரை திருமணம் செய்துகொள்ளும்படி கோரினார்.

Cris Galera

ஆனால் அவரை திருமணம் செய்ய தான் தயாராக இல்லை எனவும், தனக்கு அவர் யார் என்றே தெரியாது, வெறும் பணத்திற்காக தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இல்லை எனவும் கூறியுள்ளார். இவர் தன்னைத்தானே திருமணம் செய்ததற்கு சமூக வலைத்தளங்களில் இவருக்கு பல ட்ரோல்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

newstm.in

Tags:
Next Story
Share it