செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!
செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

வரும் 1-ம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என ஏற்கெனவே உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த வகையில், பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் 19-ம் தேதி குறிப்பிட்ட சில பாடங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற இருப்பதன் காரணமாக, அன்றைய தேதியில் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகள் மார்ச் மாதம் 5, 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Next Story

