மூத்த காங்கிரஸ் தலைவர் காலமானார் - ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல்..!!
மூத்த காங்கிரஸ் தலைவர் காலமானார் - ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல்..!!

காங்கிரஸ் மூத்த தலைவரும்,மகாராஷ்டிரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான கே.சங்கரநாராயணன் அவர்கள், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.அவருக்கு வயது 89.
கடந்த ஒன்றரை வருடமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.அவரது உடல் அவரது இல்லத்திலும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,இன்று மாலை 5.30 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் கே.சங்கரநாராயணன், நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் மற்றும் கேரளாவில் பல்வேறு அரசாங்கங்களில் நிதி, கலால் மற்றும் விவசாய இலாகாக்களை வகித்துள்ளார். அவரது மறைவுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:
Next Story

