Theme Check

தொடர் தோல்வி.. டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. இப்படை தோற்குமா !

தொடர் தோல்வி.. டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. இப்படை தோற்குமா !

தொடர் தோல்வி.. டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு.. இப்படை தோற்குமா !
X

ஒருநாள், டி20, டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் உச்சத்தில் இருந்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. ஆனால் கடந்த சில காலங்களாக அந்த அணி பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மோசமான தோல்வி. அடுத்து வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் தோல்வியுற்று பெரும் அதிர்ச்சி அளித்தது.

twenty

இந்த நிலையில், டி20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனுக்கு போட்டி மாற்றப்பட்டது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், அதற்கான போட்டியை அட்டவணையையும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் டி20 உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் அணிகள், வீரர்களை பட்டியலை அறிவிக்க வேண்டும். இந்தநிலையில் நியூசிலாந்து அணி ஏற்கனவே வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. இந்நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மித், வார்னர், கம்மின்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதனால் ஆஸ்திரேலிளயா அணி வலுவாகவே உள்ளது.

twenty

ஆஸ்திரேலிய அணி வருமாறு:-
ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ் (துனை கேப்டன்), மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசில்வுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்லிஸ்.
டேனியல் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it