கடும் உணவு பஞ்சம்.. ஒரு வாழைப்பழம் ரூ.500 !! அதிகாரத்தின் கீழ் மக்கள் பரிதவிப்பு !!
கடும் உணவு பஞ்சம்.. ஒரு வாழைப்பழம் ரூ.500 !! அதிகாரத்தின் கீழ் மக்கள் பரிதவிப்பு !!

உலகில் எப்போதும் மர்மதேசமாக இருப்பது வடகொரியா நாடு. கிழக்கு ஆசிய நாடான அங்கு என்ன நடக்கிறது.. மக்கள் வாழ்க்கை முறை குறித்து அறிந்துகொள்ள உலக நாடுகள் முயற்சித்து வருகிறது. ஆனால் அதனை கண்டுபிடிக்கமுடியவில்லை. அந்நாட்டு மக்களும் அவ்வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. உதராணத்திற்கு எந்தவொரு வெளிநாட்டு படங்களையும் அந்நாட்டில் பார்க்க முடியாது.

வடகொரியாவில் யாராக இருந்தாலும் எந்த தண்டனையாக இருந்தாலும் மரண தண்டனை நிச்சயம். எல்லாம் அதிபரின் ஒற்றை விரல் உத்தரவில் தான் உள்ளது. இந்த நிலையில், வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.

வடகொரியாவில் கடந்த ஓர் ஆண்டாக அடிக்கடி சூறாவளி மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடையால் வடகொரியாவில் 15 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை வாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு வாழைப்பழம் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 500க்கு விற்கப்படுகிறது.

அந்நாட்டு மக்களும் பணம் இல்லாமல் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ள கிம் ஜாங் உற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற விவசாய துறையினர் தவறிவிட்டதாக விமர்சித்துள்ளார். இதனால் வடகொரியா அடுத்து என்னசெய்யப்போகிறது என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
newstm.in

