செக்ஸ் வீடியோ பரவியதால் சிறுமி விபரீத முடிவு.. காதலனின் செயலால் அதிர்ந்த குடும்பம்!!
செக்ஸ் வீடியோ பரவியதால் சிறுமி விபரீத முடிவு.. காதலனின் செயலால் அதிர்ந்த குடும்பம்!!

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சரநகர் பகுதியில் 16 வயது சிறுமியும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று இளைஞர் உல்லாசம் அனுபவித்துள்ளார். பல நாட்களாக இந்த உல்லாசம் தொடர்ந்த நிலையில், ஒருநாள் அதனை தனது செல்போனில் அந்த இளைஞர் படம்பிடித்தார்.
பின்னர் அந்த வீடியோவை தனது நண்பர்கள் மூன்று பேருக்கு பகிர்ந்துள்ளார். அவர்கள் அப்பகுதி இளைஞர்களுக்கு பரவியதால் சிறுமி மீதான பார்வை மாறியது. இதனை அறிந்துகொண்ட சிறுமி தனது அந்தரங்க வீடியோ ஊர் முழுவதும் பரவியதால் மனஉளைச்சல் அடைந்து வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், அவளின் காதலன் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவை பரப்பியதற்காக அவரது மூன்று நண்பர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
newstm.in