சொகுசு காரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – எம்எல்ஏ மகனுக்கு தொடர்பு!?
சொகுசு காரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – எம்எல்ஏ மகனுக்கு தொடர்பு!?

17 வயது சிறுமியை சொகுசு காருக்குள் வைத்து மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காருக்குள் வைத்து மூன்று பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலைய போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
அதில் எம்.எல்.ஏ.வின் மகன் ஒருவர், மற்றொரு இளைஞர் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
newstm.in

