Theme Check

பாலியல் அத்துமீறல்.. கூகுள் நிறுவனத்தில் ஒலிக்கும் வேதனை குரல்கள்.. சுந்தர் பிச்சைக்கு பரபரப்பு கடிதம் !!

பாலியல் அத்துமீறல்.. கூகுள் நிறுவனத்தில் ஒலிக்கும் வேதனை குரல்கள்.. சுந்தர் பிச்சைக்கு பரபரப்பு கடிதம் !!

பாலியல் அத்துமீறல்.. கூகுள் நிறுவனத்தில் ஒலிக்கும் வேதனை குரல்கள்.. சுந்தர் பிச்சைக்கு பரபரப்பு கடிதம் !!
X

உலகில் வேலை செய்வதற்கு சிறந்த இடமாக கூகுல் நிறுவனம் கருதப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது அங்கு எழுந்திருக்கும் அடுக்கடுக்கான புகார்கள் பல்வேறு கேள்விகளை துண்டியுள்ளது. அங்கு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் பாலியல் வன்முறைகள் அதிகம் இருப்பதாகவும் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று 1,378 ஊழியர்கள் திறந்த மடல் ஒன்றை சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அனுப்பியுள்ளனர்.

அதில், பணியிடங்களில் பாலியல் வன்முறையில் ஈடுபடும் பித்து பிடித்தவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மடலை எழுதிய ஊழியர்கள் அனைவரும் கூகுளின் ஆல்பாபெட்டில் பணியாற்றி வருபவர்கள். அவர்கள் பணியாற்றும் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு என்பது அறவே இல்லை என்றும், பாலியல் ரீதியிலான வன்முறைகள் அதிகம் இருப்பதாகவும், மேல் அதிகாரிகளிடம் சொல்லியும் நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஒரு குழுவை நிர்வகிப்பது மற்றும் தலைமையாக இருந்து செயல்படுத்துவது போன்ற பணிகளை, பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுபவர்களும், அது சார்ந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபர்களும் வழங்கக்கூடாது என்றும் அந்த கடிதத்தில் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதனால் தற்போது கூகுள் நிறுவனத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடிதம் விவகாரம் வெளியானதால் கூகுள் பிரச்னை உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

newstm.in


Tags:
Next Story
Share it