Theme Check

#BREAKING:- பல்கலை மற்றும் கல்லூரிகளில் பாலியல் புகார் விசாரிக்க தனி கமிட்டி..!!

#BREAKING:- பல்கலை மற்றும் கல்லூரிகளில் பாலியல் புகார் விசாரிக்க தனி கமிட்டி..!!

#BREAKING:- பல்கலை மற்றும் கல்லூரிகளில் பாலியல் புகார் விசாரிக்க தனி கமிட்டி..!!
X

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க வேண்டும் என பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) முக்கிய அறிவிப்பு ஒன்றை சுற்றறிக்கை மூலம் அனுப்பியுள்ளது.அந்த அறிக்கையில், ‘பல்கலைக்கழக வளாகங்களிலும், கல்லூரி வளாகங்களிலும் பேராசிரியைகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும்.

அதே போன்று, எந்த விதமான வன்முறை சம்பவங்களும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக தனி கமிட்டி அமைக்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.அதில் தாமதம் கூடாது என்றும், தனி கமிட்டியின் விவரங்களை UGC-யிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அதை செயல்படுத்தவில்லை என்று UGC-க்கு புகார் வந்ததன் காரணமாக மீண்டும் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it