Theme Check

பாலியல் தொல்லை.. புகார் கொடுத்ததால் மூவரை வெட்டிக்கொன்ற நபரு தூக்குத் தண்டனை !! அதிரடி தீர்ப்பு!

பாலியல் தொல்லை.. புகார் கொடுத்ததால் மூவரை வெட்டிக்கொன்ற நபரு தூக்குத் தண்டனை !! அதிரடி தீர்ப்பு!

பாலியல் தொல்லை.. புகார் கொடுத்ததால் மூவரை வெட்டிக்கொன்ற நபரு தூக்குத் தண்டனை !! அதிரடி தீர்ப்பு!
X

ஆலங்குளம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை போலீசில் புகார் செய்ததால் இளம்பெண், அவரது தாய் மற்றும் தாத்தாவை வெட்டி படுகொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (36). இவர், கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி அதே கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட கோமதி என்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் பேச்சித்தாய், ஆலங்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தார். ஆலங்குளம் போலீசார், முத்துராஜிடம் விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தனர்.

பாலியல் தொல்லை.. புகார் கொடுத்ததால் மூவரை வெட்டிக்கொன்ற நபரு தூக்குத் தண்டனை !! அதிரடி தீர்ப்பு!

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த முத்துராஜ், அடுத்த 4 நாட்களில் அதாவது 2016 பிப்ரவரி 16ஆம் தேதி பேச்சித்தாய், அவரது மற்றொரு மகள் மாரியம்மாள் (23), பேச்சித்தாயின் தந்தை கோவிந்தசாமி (79) ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இந்த சம்பவம் அப்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாலியல் தொல்லை.. புகார் கொடுத்ததால் மூவரை வெட்டிக்கொன்ற நபரு தூக்குத் தண்டனை !! அதிரடி தீர்ப்பு!

3 பேரையும் வெட்டி படுகொலை செய்த வழக்கில், ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிந்து முத்துராஜை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் மூவரை கொலை செய்த முத்துராஜிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜரானார்.

newstm.in

Tags:
Next Story
Share it