Theme Check

சகோதரிக்கு பாலியல் தொல்லை.. பழி வாங்க பெண் வேடமிட்ட சகோதரன் !

சகோதரிக்கு பாலியல் தொல்லை.. பழி வாங்க பெண் வேடமிட்ட சகோதரன் !

சகோதரிக்கு பாலியல் தொல்லை.. பழி வாங்க பெண் வேடமிட்ட சகோதரன் !
X

மத்தியபிரதேச மாநிலம் நாயா என்ற பகுதியில் சோனு என்னும் இளைஞர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருக்குச் சகோதரி ஒருவரும் உள்ளார். இந்நிலையில் அவரது சகோதரிக்கு அண்மையில் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அவரது குடும்பம் பெரும் சோகத்திலும அச்சத்திலும் மூழ்கியது.

எனினும், தனது சசோதரிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை பழிவாங்க சோனு திட்டம்போட்டுள்ளார். இதனால் தன்னை ஒரு பெண் போன்று மாற்றி வேடம்அணிந்துள்ளார். பின்னர் அந்த நபரிடம் தன்னுடைய பெயர் சோனியா எனக்கூறி அறிமுகமாகியுள்ளார். மேலும் அந்த நபருடன் சேர்ந்து பைக்கில் சோனு வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில் இருவரும் பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்குச் சென்று தனிமையான இடத்தில் மது அருந்தியுள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் திருடர்கள் என நினைத்து சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் கிராம மக்கள் பெண் வேடமிட்டிருந்த சோனுவை மட்டும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் சோனுவிடம் தப்பிச் சென்ற இளைஞர் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது சோனு, தான் பெண் இல்லை எனவும், தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனுக்குப் பாடம் புகட்டவே பெண் வேடமிட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய திட்டம் நிறைவேறுவதற்கு முன்னமே போலீசாரிடம் சிக்கிக்கொண்டதையும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பியோடிய நபரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்தனர். தனது சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை பழிவாங்க திட்டமிட்ட இளைஞரை பிடித்துகொடுத்துவிட்டதாக கிராம மக்களும் கவலை அடைந்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it