Theme Check

கம்பியின் உச்சியில் நின்று கவர்ச்சி நடனமாடிய இளம்பெண்! எதிர்பாராமல் கீழே விழுந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!!

நம்மூரைப் போல இல்லாமல் வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக கண்களைக் கவரும் வகையில் சொகுசு ஹோட்டல்களும், நட்சத்திர விடுதிகளும், நள்ளிரவு கேளிக்கைகளும் மலிந்து கிடக்கின்றன. அப்படி நைட் க்ளப்களில் நள்ளிரவு நடைப்பெறும் நடன நிகழ்ச்சிகளில், இளம்பெண்கள் கவர்ச்சி உடை அணிந்துக் கொண்டு தங்களது சொகுசு

கம்பியின் உச்சியில் நின்று கவர்ச்சி நடனமாடிய இளம்பெண்! எதிர்பாராமல் கீழே விழுந்த அதிர்ச்சி! வைரலாகும் வீடியோ!!
X

நம்மூரைப் போல இல்லாமல் வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக கண்களைக் கவரும் வகையில் சொகுசு ஹோட்டல்களும், நட்சத்திர விடுதிகளும், நள்ளிரவு கேளிக்கைகளும் மலிந்து கிடக்கின்றன. அப்படி நைட் க்ளப்களில் நள்ளிரவு நடைப்பெறும் நடன நிகழ்ச்சிகளில், இளம்பெண்கள் கவர்ச்சி உடை அணிந்துக் கொண்டு தங்களது சொகுசு ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அந்தரத்தில் தொங்கியபடியே கண்களைக் கவரும் வகையில் வளைந்து நெளிந்து நடனமாடுவது வழக்கம்.

அந்த வகையில், அமெரிக்காவில் உள்ள ஒரு நைட் க்ளப்பில் கவர்ச்சியான உடையில் ஒரு பெண் கம்பியின் உச்சியில் ஏறி நடனமாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபரீதம் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரத்தில் இருக்கும் நட்சத்திர விடுதி ஒன்றில் நைட் க்ளப் நேரத்தில் இரண்டு இளம்பெண்கள் கவர்ச்சி நடனமாடியுள்ளனர். அப்போது 15 அடி உயர கம்பியின் உச்சியில் ஆடிக் கொண்டிருந்த ஜெனியா என்ற பெண் திடீரென அந்தரத்தில் இருந்து எதிர்பாராத வகையில் கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த காயமடைந்ததையும் பொருட்படுத்தாமல் அந்த பெண், மீண்டும் எழுந்து நடனத்தைத் தொடர்ந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதை அடுத்து, ஜெனியாவிற்கு பலரும் போன் செய்தும், மெசேஜ் அனுப்பியும் நலம் விசாரித்து வருகின்றனர். மேலும் ஜெனியா அந்த விடுதியின் தற்காலிக ஊழியர் என்பதால் காயத்துக்கு இழப்பீடு தரமுடியாது என்று நிர்வாகம் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கீழே விழுந்ததில் தாடையில் காயம் ஏற்பட்டு, பற்கள் சிலவும் உடைந்து விட்டன, கணுக்காலில் சின்ன காயம் ஏற்பட்டுள்ளது. எல்லோருடைய பிரார்த்தனைகளையும், செய்திகளையும் பார்த்ததில் மகிழ்ச்சியாக உள்ளது' என்று அந்த பெண் கண்ணீருடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it