Theme Check

ஹெல்மெட் போடாவிட்டால் ஷாரூக்கான் நிலைமைதான் வரும்.. எச்சரிக்கும் காவல்துறை !!

ஹெல்மெட் போடாவிட்டால் ஷாரூக்கான் நிலைமைதான் வரும்.. எச்சரிக்கும் காவல்துறை !!

ஹெல்மெட் போடாவிட்டால் ஷாரூக்கான் நிலைமைதான் வரும்.. எச்சரிக்கும் காவல்துறை !!
X

ஹெல்மெட் போடாவிட்டால் ஷாரூக்கான் நிலைதான் வரும் என்று, காவல்துறையினரின் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் கலக்கிவந்த இயக்குநர் அட்லீ தற்போது இந்திக்கு சென்றுள்ளார். அங்கு, நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது. பின்னர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த போஸ்டரில் தலையில் கட்டுப் போட்டு ஷாரூக்கான் மிரட்டலாக தோன்றினார். இதை பார்ப்பதற்கு அவர் தலையில் நன்றாக அடி வாங்கியதைப் போன்று இருக்கும். ஜவான் படத்தின் போஸ்டர் வைரலானதை தொடர்ந்து அதனை நாக்பூர் நகர காவல்துறையினர் ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தியுள்ளனர்.

mask bike

இதுதொடர்பாக நாக்பூர் காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் ஹெல்மெட் அணியாமல் போகும்போது இப்படித்தான் நடக்கும் என்று பதிவிட்டு, ஜவான் ஃபர்ஸ்ட் லுக்கை அப்லோட் செய்திருக்கிறார்கள். மேலும், இப்போதாவது ஹெல்மெட் அணியுங்கள் என்றும் போலீசார் வலியுறுத்தியுள்ளனர். நாக்பூர் சிட்டி போலீசின் இந்த விழிப்புணர்வு பதிவு மக்கள் ரீச் ஆகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in


Tags:
Next Story
Share it