Theme Check

மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது.. யோகி அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி !

மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது.. யோகி அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி !

மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது.. யோகி அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி !
X

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி வருகிறது. இதில் வடமாநிலங்களில் தான் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. அதிலும் ஆக்சிஜன் இல்லாமல் மருத்துவமனைகளில் உயிரிழப்பு அதிகமாகவே உள்ளதால் பெரும் அச்சம் எழுந்துள்ளது.

குறிப்பாக உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிக்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். அந்த அளவுக்கு உயிரிழப்புகள் தினமும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்திரபிரதேசத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரபிரதேச அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாதது வெட்கக்கேடானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அரசு மருத்துவமனைக்கு சென்றால் கொரோனாவுக்கு இறக்காதவர்கள் டெங்குக்குக்காக இறந்துவிடுவர் எனவும் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

அந்த அளவுக்கு முறையான மின்சாரம், போதிய கழிப்பறைகள் இல்லாமல் மருத்துவமனைகள் உள்ளன. கொரோனா தடுப்பு விவாகரத்தில் யோகி ஆதித்யநாத் அரசு, என்வழி இல்லையேல் வேறு வழியே இல்லை என்ற அணுகுமுறையை கைவிட்டு, நீதிமன்றத்தின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் அதிரடியாக கூறினர்.

மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 14 நாட்கள் முழுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதவிர உள்ளாட்சித் தேர்தலின் போது 135 அரசு ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in


Tags:
Next Story
Share it