ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு.. 229 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா !!
ஷர்துல் தாகூர் அபார பந்துவீச்சு.. 229 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா !!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் மேர்கோ ஜேன்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பீட்டர்சன் 62 ரன்களும், டெம்பா பவுமா 51 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த இன்னிங்சில் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. அவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷர்துல் தாக்கூர் 17.5 ஓவர்கள் வீசி 61 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான பவுலிங் இன்னிங்ஸாக அமைந்துள்ளது.
இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆம் இன்னிங்சை ஆடி வருகிறது. இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியதால் இப்போட்டியில் முடிவு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

