53 பேருடன் கப்பல் மாயம்! இந்திய கடற்படை தேடுதல் வேட்டையில் தீவிரம்!
53 பேருடன் கப்பல் மாயம்! இந்திய கடற்படை தேடுதல் வேட்டையில் தீவிரம்!

இந்தோனேசியாவிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் கே.ஆர்.ஐ. நங்கலா-402. இந்தக் கப்பல் இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள பாலி தீவு அருகே ஜாவா கடலில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த கப்பலில் இந்தோனேசிய கடற்படையினர், மாலுமிகள் உட்பட மொத்தம் 53 பேர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நீர்மூழ்கி கப்பல் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பாலி தீவு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 95 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடன் அதன் தொடர்பை இழந்தது.கட்டுப்பாட்டு அறையில் இருந்து கப்பலை மீண்டும் முயற்சித்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்து வருகிறது.

இந்தோனேசிய கடற்படையினர் உடனடியாக நீர்மூழ்கி கப்பல் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் பாலி தீவில் உள்ள கடற்பரப்பில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒரு ஜெர்மன் தயாரிப்பு. கப்பல் மாயமாகி 24 மணி நேரம் கடந்து விட்ட நிலையில் கப்பலை தேடும் பணியில் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளிடம் இந்தோனேசியா உதவி கோரியுள்ளது.
இதையடுத்து, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆழ்கடல் நீர்மூழ்கி மீட்பு கப்பல் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நீர்மூழ்கி கப்பலில் பயணித்த 53 பேரின் நிலை என்ன என்பது குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதால் சர்ச்சையும், பரபரப்பும் உருவாகியுள்ளது.

