மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்கிறது சிவசேனா? - பாஜக சதி ஆட்டம் !!
மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்கிறது சிவசேனா? - பாஜக சதி ஆட்டம் !!

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும், மத்தியிலும் பாஜக மட்டுமே ஆட்சி செய்யவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது பாஜக. இதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்ற போக்குடன் உள்ளது. இந்த திட்டத்தை பாஜக நிர்வாகிகள் பலரும் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.
இதற்காக எதிர்க்கட்சிகள் ஆளும் ஒவ்வொரு மாநிலத்திலும் குழப்பத்தை உண்டாக்கி ஆட்சியை கவிழ்த்து வருகிறது பாஜக என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது இந்த ஆட்டத்தை மகாராஷ்டிராவிலும் செயல்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏக்நாத் ஷிண்டே 12 எம்எல்ஏக்களுடம் குஜராத்தில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியுள்ளார்.

இந்த சூழலில் பாஜக மீது ஆட்சி கவிழ்ப்பு புகாரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், 2019ஆம் ஆண்டு சிவசேனா தலைமையில் மெகா சகாதி கூட்டணி அமைக்கப்பட்ட போது ஆட்சியை கவிழ்க்க இதே போன்று பாரதிய ஜனதா முயன்றது. குஜராத்தில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் நிபந்தனையின்றி திரும்பி வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆட்சி அமைப்பதற்கான தேவை ஏற்பட்டால் அதுவும் நடக்க சாத்தியம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் டெல்லி சென்றுள்ளார்.

இதற்கிடையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் திடீர் பரபரப்பு எழுந்துள்ளது.
newstm.in

