Theme Check

அதிர்ச்சி! 3 மாதங்களில் 12 யானைகள் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! 3 மாதங்களில் 12 யானைகள் உயிரிழப்பு!!

அதிர்ச்சி! 3 மாதங்களில் 12 யானைகள் உயிரிழப்பு!!
X

கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 12 யானைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக வனத்துறை சார்பில் தனியாக கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் 11 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில், மின் வேலியில் சிக்கியும், அவுட்டு காய் வெடித்தும் யானைகள் உயிரிழந்துள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் ரயில் மோதி கர்ப்பிணி பெண் யானை உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி வால்பாறையில் உள்ள பழைய சத்துணவு கூட கட்டிடத்திற்கு இறந்த குட்டி யானையின் எழும்புகளை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

elephant

இப்படி யானைகள் உயிரிழப்பு தொடர் கதையாகி வருகிறது. பெரும்பாலும் உடல் நலக்குறைவால் யானைகள் இறந்துள்ளது. ஆனாலும் அதற்கான காரணங்களை வனத்துறையினர் கண்டறிய வேண்டும், அதே போல் உயிரிழப்பை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இயற்கைக்கு முரணாக உயிரிழக்கும் வன உயிரினங்கள் கண்டறிந்து தணிக்கை செய்ய மூத்த ..எப் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை செயலாலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

elephant

அதே போல் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு நேரில் சென்று இயற்கைக்கு முரணாக யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it